feddral bank
BREAKING NEWS

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி

பதிவு செய்த நாள்: 10 Dec 2016 3:34 pm

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இன்றும் காலையில் இருந்தே பொது மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். பலர் மொட்டை அடித்தனர். சில பெண்கள் துக்கம் தாளாமல் கதறி அழுதனர்.

நண்பகல் 11.24 மணிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி, மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வந்தனர்.

அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். சமாதியை ஒரு முறை சுற்றி வந்தனர். பின்னர் அங்கிருந்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோட்டைக்கு புறப்பட்டு சென்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds