news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

கறுப்புபணத்தை மாற்ற உதவிய ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளர்கள் கைது

பதிவு செய்த நாள்: 10 Dec 2016 11:27 am

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒருகட்டமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.

வங்கிகளில் மாற்ற இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கருப்புப் பணத்தை குவித்து வைத்திருக்கும் பலர் அந்தப் பணத்தை தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தினால் மாட்டிக் கொள்வோம் என்று அஞ்சுகின்றனர்.

இவர்களில் சிலர் வேறு நபர்களின் பெயர்களில் போலியாக கணக்குகளை ஆரம்பித்து அந்த கணக்குகளில் தங்களது கள்ளப்பணத்தை முதலீடு செய்து, கருப்பை வெள்ளையாக்கி கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, வருமான வரித்துறையினர் பல்வேறு வங்கிகளில் திடீர் சோதனை நடத்தியபோது டெல்லி காஷ்மேரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையை சேர்ந்த இரு மேனேஜர்கள் கருப்புப் பணத்தை மாற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், கடந்த ஒருமாத காலத்தில் இங்குள்ள 44 போலி கணக்குகள் மூலம் சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது.

தற்போது, மேற்படி கணக்குகளில் இருக்கும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முடக்கியுள்ள அதிகாரிகள், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds