feddral bank
BREAKING NEWS

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் இன்று அஞ்சலி

பதிவு செய்த நாள்: 09 Dec 2016 10:07 am

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

ஜெயலலிதா மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 6-ம் தேதி முதல் (டிசம்பர்-8) வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ளது. ஒரு நாள் பொதுவிடுமுறையும், 7 நாட்கள்அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் இன்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds