news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை நடைபெறுகிறது

பதிவு செய்த நாள்: 09 Dec 2016 3:53 pm

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த 6-ந்தேதி பதவியேற்றது.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 31 பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டதால் அன்று அவர்கள் தலைமை செயலகத்துக்கு வரவில்லை. 7-ந்தேதி, 8-ந்தேதி அஷ்டமி, நவமியாக இருந்ததால் புதிய பணியை அன்றைய தினங்களில் தொடங்க வேண்டாம் என்று தலைமை செயலகத்துக்கு அவர்கள் வரவில்லை.

இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர்கள் அனைவரும் தலைமை செயலகத்துக்கு வந்து தங்கள் இருக்கையில் அமர்ந்து பணியைத் தொடங்கினார்கள். காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலமாக இருந்ததால், மதியத்துக்குப் பிறகே அமைச்சர்கள் வந்தனர்.

தலைமை செயலகத்துக்கு வரும் முன்பு ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செய்து விட்டு வந்தனர்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்க உள்ளார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds