[email protected]
feddral bank
BREAKING NEWS

சபாநாயகரின் உத்தரவை மீறி கோ‌ஷம் எழுப்பும் எம்.பி.க்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கோரிக்கை

பதிவு செய்த நாள்: 09 Dec 2016 12:56 pm

பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கடந்த 15 நாட்களாக சபை சரியாக நடைபெறவில்லை.

ரூபாய் நோட்டு பிரச்சினை பற்றி பிரதமர் பாராளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும். இது சம்பந்தமாக விவாதம் நடத்தி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வற்புறுத்துகின்றன.

தினமும் பாராளுமன்றம் கூடியதும் அவர்களுடைய தொடர் அமளியால் சபையை நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தவைர் அத்வானி அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். சபாநாயகருக்கு சபையை நடத்த தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சாந்தகுமார் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் எம்.பி.க்கள் மீது உரிய நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்கள் உத்தரவையும் மீறி உறுப்பினர்கள் மைய பகுதிக்கு வந்து கோ‌ஷம் எழுப்பினால் அன்றைய தினத்தின் அவர்களுடைய சம்பளத்தையும், அலவன்சையும் நிறுத்தி வையுங்கள்.

உங்கள் எச்சரிக்கைக்கு பிறகும் கீழ்ப்படியாமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்களை எஞ்சிய சபை நாட்கள் முழுவதும் நீக்கி வையுங்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds