[email protected]
feddral bank
BREAKING NEWS

ஜெயலலிதா உடலுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பதிவு செய்த நாள்: 06 Dec 2016 11:53 am

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கே.என். நேரு, எ.வ. வேலு, ஐ. பெரியசாமி ஆகியோர் வந்திருந்தனர்.

அஞ்சலிக்குப் பின் நிருபர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறுகையில் ‘‘அம்மையாரின் மறைவு அதிர்ச்சி மற்றும் வேதனையில்  அனைவரையும் ஆளாக்கியுள்ளது. அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கும் அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், அதிமுக அதிகாரிகள் மற்றும் தமிழக பொதுமக்களுக்கு கலைஞர் கருணாநிதி சார்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற சார்பிலும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மையார் ஜெயலலிதா எந்த பொறுப்பை வகித்தாலும், சத்துணவு குழுவின் ஒரு உறுப்பினர், ராஜ்யசபா உறுப்பினர், அதி.மு.க. பொதுச் செயலாளர், தமிழக முதல்- அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றிய நேரத்தில், அதில் தனி முத்திரை வகித்து பாராட்டு பெற்றது சிறப்புக்குரியதில் ஒன்று.

கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது, நான் துணை முதல்வராக இருந்தேன். அப்போது அம்மையார் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது நான் தற்போது எதிர்க்கட்சி தலைவராக அவருடன் பணியாற்றியுள்ளேன்.

எந்த பிரச்சினையையும் விடாப்பிடியாக இருந்து நிறைவேற்றும் வகையில் அழுத்தத்தை வெளிக்காண்பித்தவர் என்பதற்காக பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். அவரை இழந்து தவிக்கும் தமிழக மக்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் முறையில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds