[email protected]
feddral bank
BREAKING NEWS

3 தொகுதி இடைதேர்தல்: வாகன சோதனையில் இதுவரை ரூ.13 கோடி பறிமுதல்-

பதிவு செய்த நாள்: 17 Nov 2016 11:23 am
By :

தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த 15-ந் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அரவக்குறிச்சியில், வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்படும் ‘ஸ்டிக்கர்’ மாதிரிகளை கொண்ட 14 பண்டல்கள் கைப்பற்றப்பட்டன. திருப்பரங்குன்றத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 810 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

3 தொகுதிகளிலும் ரூ.13 கோடியே 69 லட்சத்து 20 ஆயிரத்து 670 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அரவக்குறிச்சியில் 45 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும், தஞ்சாவூரில் 9 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாயும், திருப்பரங்குன்றத்தில் 4 கோடியே 9 லட்சத்து 62 ஆயிரத்து 170 ரூபாயும் கைப்பற்றப்பட்டது. இதில் திருப்பரங்குன்றத்தில் 36 லட்சத்து 21 ஆயிரத்து 30 ரூபாய்க்கு கணக்கு காட்டப்பட்டதைத் தொடர்ந்து அந்த தொகை திருப்பித் தரப்பட்டு விட்டது.

அதன்படி 3 தொகுதிகளிலும் இதுவரை 13 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 640 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் 3¼ கிலோ தங்கம், 9.75 கிலோ வெள்ளி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கு காட்டப்படாததைத் தொடர்ந்து அவை திருப்பித்தரப்படவில்லை.

தஞ்சாவூர் தொகுதிக்கு கூடுதல் செலவீன பார்வையாளராக பினாய்குமார், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சிறப்பு பார்வையாளராக விலாஷ் ஷிண்டே, அரவக்குறிச்சி கூடுதல் செலவீன பார்வையாளராக மொகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds