[email protected]
feddral bank
BREAKING NEWS

ரூபாய் நோட்டுகள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு தாக்கல்

பதிவு செய்த நாள்: 17 Nov 2016 3:17 pm

ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து பல்வேறு மாநில கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மாநில கோர்ட்டுகள் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு எதிராக எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது.

மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நாளை இதன் மீது விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*