[email protected]
feddral bank
BREAKING NEWS

மீண்டும் சமாஜ்வாடி கட்சியில் ராம்கோபால் யாதவ் நீக்கிய உத்தரவை திரும்ப பெற்றார் அகிலேஷ்

பதிவு செய்த நாள்: 17 Nov 2016 4:05 pm

உ.பி.யில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் வாரிசு அரசியல் மோதல் காரணமாக முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவ் ஆகியோரின் ஆதரவாளர்கள் மாறி மாறி நீக்கப்பட்டனர். அப்படி நீக்கப்பட்டவர்களில் அகிலேஷின் மற்றொரு சித்தப்பாவான ராம்கோபால் யாதவ் எம்.பி.யும் ஒருவர். இவர் கட்சி கட்டுப்பாடுகளை மீறி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.

இந்நிலையில், மக்களவையில் நேற்று சமாஜ்வாடி கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராம்கோபால் யாதவும் கலந்து கொண்டார். அவர் வைத்திருந்த டிஜிட்டல் போர்டில் அவர் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவர் என தெளிவாக காட்டப்பட்டிருந்தது.

அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டிருப்பதை கட்சி தலைமையும் உறுதி செய்தது. ராம் கோபால் யாதவை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றிருப்பதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தலைவர் முலாயம் சிங் கடிதம் எழுதியுள்ளார். இதனால் ராம்கோபால் யாதவ் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளராக தனது பணியை தொடர்வார். கட்சியின் மத்திய பாராளுமன்றக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

இதுபற்றி ராம் கோபால் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், கட்சிக்கு விரோதமாக எதையும் செய்யவில்லை என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds