[email protected]
feddral bank
BREAKING NEWS

பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பின் பேச்சுக்கு இந்திய ராணுவம் மறுப்பு

பதிவு செய்த நாள்: 17 Nov 2016 4:02 pm
By :

இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரு தரப்பு ராணுவ வீரர்களும் சிறுரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதால் பதட்டமான சூழ்நிலை நீடிக்கிறது. சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்திருந்தது.

இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது, எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த தினத்தன்று 11 இந்திய வீரர்களையும் கொன்றோம்” என்று பேசியிருந்தார். ஊடகங்களில் வெளியான இந்த தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்திய ராணுவம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுபற்றி வடக்கு கமாண்ட் பிரிவு நேற்று இரவு வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டில் திங்கள் கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை ஆகிய தினங்களில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds