[email protected]
feddral bank
BREAKING NEWS

செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்ற சென்று பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு

பதிவு செய்த நாள்: 17 Nov 2016 11:16 am
By :

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சுரேஷ் சோனார் (வயது 40) நேற்று தன் மகள் திருமண நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் தன்னிடம் இருந்த செல்லாத நோட்டுகளை நேற்று முன்தினம் நீண்டநேரம் வரிசையில் நின்று வங்கியில் இருந்து மாற்றி எடுத்து வந்தார். இதில் உடல் சோர்வு அடைந்த அவர் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வங்கியில் பணம் மாற்றுவதற்காக வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராமச்சந்திர பஸ்வான் (70) ஓய்வூதியத்தை பெறவும், தன்னிடம் இருந்த செல்லாத நோட்டுகளை மாற்றவும் நேற்று அதிகாலை வங்கியில் நீண்ட வரிசையில் நின்றார். மூத்த குடிமக்களுக்கு தனியாக வரிசை இல்லாததால் பிற்பகல் 3 மணி வரை நின்ற அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, சித்தூர் மாவட்டத்தில் பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற விஜயலட்சுமி (72), ரத்னா (70) ஆகியோர் மாரடைப்பால் இறந்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds