[email protected]
feddral bank
BREAKING NEWS

பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள்: 16 Nov 2016 12:50 pm

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று மக்களவை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதையடுத்து, வெளியேவந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்னர் கூட்டமாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்புநிற போர்வைகளை அணிந்தபடி, பொருளாதார அவசரநிலையை உடனடியாக திரும்பப் பெறு’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*