[email protected]
feddral bank
BREAKING NEWS

நாட்டின் நன்மைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும்-மோடி

பதிவு செய்த நாள்: 16 Nov 2016 3:16 pm

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

கடந்த கூட்டத்தொடரில் சரக்கு சேவை வரி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்காக உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த குளிர்கால கூட்டத் தொடரிலும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற உள்ளன. அனைத்து விவகாரங்கள் குறித்தும் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்படும். அனைத்து கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். மக்களின் நன்மைக்காக அதனை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்வோம்.

ஒவ்வொரு விவகாரம் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்த தயாராக உள்ளோம். அதன் முடிவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும். வரி முறையை சீர்திருத்தம் செய்ய நினைக்கிறோம்.

எங்களின் நடவடிக்கையின் நோக்கம் இந்தியாவுக்கு நன்மை அளிப்பது மட்டுமே. எம்.பி.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் அது வெற்றிக்கு வழி வகுக்கும். நாட்டின் நன்மைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு மோடி கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*