feddral bank
BREAKING NEWS

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை தீவிரவாதம், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை-முரளிதரராவ்

பதிவு செய்த நாள்: 16 Nov 2016 5:23 pm
By :

பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை தொகுதியில் கடந்த முறை தேர்தல் ரத்து செய்ததற்கு சேமித்து வைத்திருந்த கருப்பு பணத்தை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்தது தான் காரணம். தி.மு.க., அ.தி.மு.க.. பிரதமர் மோடி தலைமையில் தான் பா.ஜ.க. அரசு கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பதுக்கல் காரர்களுக்கும், குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு பணம் ஒழிக்கப்பட்டால் விலைவாசி குறையும். பணவீக்கம் கட்டுப்படும்.

கருப்புபணம் தீவிரவாதம், மாவோயிஸ்டுகளுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கருப்புபணம் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக குரல்கொடுப்பவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதம், கள்ளநோட்டு, மாவோயிஸ்டுகளுக்கு துணை போவதற்கு சமம். கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை தீவிரவாதம், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை. இந்திய மக்கள் தீவிரவாதம், பயங்கரவாதம், மாவோயிஸ்டு போன்றவற்றை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். அதனால் தான் பா.ஜ.க. அரசு கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதன் மூலம் மாநகராட்சி, மாநில அரசு, மத்திய அரசுகளுக்கு வருமானம் அதிகரிக்கும். சிறந்த பள்ளிகள், சிறந்த மருத்துவ மனைகள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த முடிவும். 70 ஆண்டுகளில் இது போன்ற நடவடிக்கை எடுக்க வில்லை. இது பா.ஜ.க. அரசின் வெளிப்படைத்தன்மையை காட்டுகிறது. பா.ஜ.க.வின் நோக்கம் வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி தான்.

ஜல்லிக்கட்டுக்கு பா.ஜ.க. வினர் எதிரானவர்கள் அல்ல. அது ஒரு கலை. அதற்கு நாங்கள் முழு ஆதரவை அளிக்கிறோம். அதில் சில விதிமீறல்கள் உள்ளன. அது சரி செய்யப்பட்டு மீண்டும் ஜல்லிக் கட்டு கொண்டுவரப்படும். காவிரி பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணையில் உள்ளது. அது நீண்ட கால பிரச்சினை. ஆனால் அந்த பிரச்சினைக்கு பா.ஜ.க. அரசு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் முரளிதரராவ், தஞ்சை தொம்பன்குடிசை பகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது மாநில தலைவர் தமிழிசைசவுந்தரராஜன் உடன் இருந்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds