[email protected]
feddral bank
BREAKING NEWS

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி

பதிவு செய்த நாள்: 16 Nov 2016 2:51 pm
By :

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 7-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுஷ்மாவுக்கு 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதால், அவரது சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு ‘டயாலிசிஸ்’ செய்யப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

‘அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார்’ என்று முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

வழக்கமாக, தனது டுவிட்டர் பக்கத்தின்மூலம் மக்களுடன் தொடர்பு வட்டாரத்தில் இருப்பதை விரும்பும் சுஷ்மா சுவராஜ்(64), தனது உடல்நிலை தொடர்பாக டுவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds