[email protected]
feddral bank
BREAKING NEWS

பிரதமர் மோடியின் கருத்திற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

பதிவு செய்த நாள்: 14 Nov 2016 4:42 pm
By :

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாப்பூரில் இன்று நடைபெற்ற ரெயில்வே இருப்பு பாதை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். ரெயில்வே திட்டப் பணிகளை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், ’கருப்பு பணத்தை ஒழிக்கவே மக்கள் என்னை தேர்ந்து எடுத்தார்கள். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் ஏழை மக்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள்.

ஆனால் வரி ஏய்ப்பு செய்த செல்வந்தர்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் தூங்குவதற்கு தூக்க மாத்திரையை வாங்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த கருத்து, சராசரி மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இழிவு என்று குறிப்பிட்டுள்ள மம்தா, ஏழை மக்களின்மீது இதுபோன்ற தாக்குதலை நடத்த வேண்டாம் எனவும் அவரை கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களை கொல்லவந்த ஆயுதம் என்றும் இந்த அறிவிப்பை குற்றம்சாட்டியுள்ள அவர், கடந்த ஆறு நாட்களில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, நேற்று இதுதொடர்பாக, மம்தா பாணர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ’மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் சராசரி மக்கள் அனுபவித்துவரும் வேதனையை எனது தொலைபேசி அழைப்பை ஏற்று, என்னுடன் பேசிய மேதகு குடியரசு தலைவரிடம் விளக்கி கூறினேன்.

வரும் 16 அல்லது 17 தேதியில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் இதுதொடர்பாக விரிவாக ஆலோசிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ள அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று மம்தா தெரிவித்திருந்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*