[email protected]
feddral bank
BREAKING NEWS

நவம்பர் 18-ம் தேதி நள்ளிரவு வரை சுங்க கட்டண ரத்து நீட்டிப்பு

பதிவு செய்த நாள்: 14 Nov 2016 4:33 pm

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் தொடர்ந்து வங்கிகளில் திரண்ட வண்ணம் உள்ளனர். கால அவகாசம் எதுவும் கொடுக்காமல் திடீரென அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்படுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை செலுத்தும் வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு ஊழியர்கள் மறுத்தனர். சில்லரை தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதன் காரணமாக பல சுங்கச்சாவடிகளில் பிரச்சினை உருவானது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பிரச்சினையை சமாளிப்பதற்காக சில இடங்களில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.

இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு செல்ல, சுங்க கட்டணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அது நவம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த சலுகை இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிய உள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண ரத்து மேலும் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் ரத்து நவம்பர் 18-ம் தேதி நள்ளிரவு வரையில் நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளார். அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகன போக்குவரத்து சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*