[email protected]
feddral bank
BREAKING NEWS

டிரா வில் முடிந்தது ஏமாற்றம் அளித்தது இங்கிலாந்து கேப்டன் குக் பேட்டி

பதிவு செய்த நாள்: 14 Nov 2016 5:35 pm

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியது. கேப்டன் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் போட்டியை ‘டிரா’ செய்ய முடிந்தது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 537 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 488 ரன்னும் குவித்தனர். இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் இந்தியாவுக்கு 310 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 132 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. விராட்கோலி- ஜடேஜா ஜோடி பொறுப்புடன் விளையாடி ‘டிரா’ செய்தது. கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியது. கோலி 49 ரன்னும், ஜடேஜா 32 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டது. எங்களால் ‘டிரா’ செய்ய முடியும் என்பதை நிரூபித்து விட்டோம். தோல்வியில் இருந்து தப்பித்து ‘டிரா’ செய்வதற்கு உரிய திறமையுடன் நாங்கள் இருக்கிறோம். ஆடுகளத்தின் தன்மை மாறி இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது.

இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. பீல்டிங்கில் முன்னேற்றம் அடைவது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் குக் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது ஏமாற்றம் அளித்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு டிக்ளேர் செய்தது. சரியான முடிவாக நான் கருதுகிறேன். முன்னதாக டிக்ளேர் செய்ய இயலாது. ஏனென்றால் ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது.

260 ரன் இலக்காக நிர்ணயித்தால் ஆட்டம் கைவிட்டு போய் இருக்கலாம். இங்கிலாந்து அணி சமபலத்துடன் இருக்கிறது. வெற்றிக்காக எங்கள் வீரர்கள் கடுமையாக போராடினார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds