[email protected]
feddral bank
BREAKING NEWS

பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க போராட்ட அறிவிப்பு வாபஸ்

பதிவு செய்த நாள்: 05 Nov 2016 12:13 pm

இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை கமிஷன் தொகையை 3.15 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல்-டீசல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்யப்போவது இல்லை என்று தெரிவித்து இருந்த பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் கொள்முதல் செய்யாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று மும்பையில் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள், பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, ஒட்டுமொத்தமாக கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளுக்கு எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் செவிமடுத்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பெட்ரோலிய பொருட் கள் விற்பனையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் எம்.ஹைதர்அலி கூறியதாவது:-

கமிஷன் தொகையை உயர்த்தி தர கோரிக்கை வைத்திருந்தோம். அதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அடுத்த 15 நாட்களுக்குள் குறைகளை சீராய்வு செய்து எதிர்வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் கமிஷன் தொகையை உயர்த்தி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.

தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.54 கமிஷன் வழங்கப்படுகிறது. ஆனால், இதில் செலவீனத்திற்கே 90 சதவீதம் சென்றுவிடுகிறது. தற்போது, கூடுதலாக வங்கி செலவீனமும் ஏற்பட்டுள்ளது. எனவே, செலவீனத் தொகையையும் உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தோம். அதன்படி, பெட்ரோலுக்கு 14 பைசாவும், டீசலுக்கு 10 பைசாவும் வரும் 15-ந் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களது போராட்டத்தையும் வாபஸ் பெற்றுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*