[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை குறையும்-வானிலை மையம் தகவல்

பதிவு செய்த நாள்: 05 Nov 2016 10:37 am

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது வட மேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது இன்னும் புயலாக மாறவில்லை. அது விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் 240 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி தமிழகத்திற்கு வெகுதூரத்தில் செல்வதால் நாளை முதல் தமிழகத்தில் மழை மிக குறையும். அதாவது ஓரிரு இடங்களில் மிக மிதமான மழை பெய்யலாம்.

 இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

காங்கேயம், ராமேசுவரம் தலா 7 செ.மீ., திண்டுக்கல் 4 செ.மீ., நத்தம் 3 செ.மீ., தாளவாடி, பேச்சிப்பாறை, அரவக்குறிச்சி, அவினாசி, கூடலூர் பஜார், வேதாரண்யம், முலனூர், சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் தலா 2 செ.மீ., பெருந்துறை, வேடசந்தூர், கோபி செட்டிப்பாளையம், நிலக்கோட்டை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*