[email protected]
feddral bank
BREAKING NEWS

டெல்லியில் அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று பேர் பலி

பதிவு செய்த நாள்: 02 Nov 2016 12:00 pm

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஷதாரா என்ற இடத்தில் நான்கு மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒருவீட்டில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தீபிடித்தது. மளமளவென பரவிய தீ மற்ற வீடுகளையும் பதம்பார்த்ததால் அங்கு குடியிருந்தவர்கள் தூக்க கலக்கத்துக்கு இடையிலும் பீதியில் அலறியபடி வெளியே ஓடி வந்தனர்.

தகவல் அறிந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்துவந்தன. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மூன்றுபேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும், பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*