feddral bank
BREAKING NEWS

அரவிந்த் கெஜ்ரிவால் அமிர்தசரஸ் கோர்ட்டில் ஆஜர்

பதிவு செய்த நாள்: 02 Nov 2016 11:39 am

பஞ்சாப் மாநிலத்தில் வருவாய்த்துறை மந்திரியாக பொறுப்பு வகித்து வருபவர் பிக்ரம் சிங் மஜிதியா. மஜிதியாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பஞ்சாபில் நடைபெற்றுவரும் போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பதாக ஒரு பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

இதுதொடர்பாக, அமிர்தசரஸ் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால், சஞ்சய் சிங், ஆஷிஷ் கேத்தன் ஆகிய மூவர்மீது மஜிதியா கடந்த மே மாதம் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராகும்படி கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

 இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி அமிர்தசரஸ் கோர்ட்டில் ஆஜராகி ஜாமின் பெற்றார். அவருடன் இதே வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரும் ஜாமின் பெற்றனர்.

இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த விசாரணையின்போது கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அவரது வக்கீல் கோரி இருந்தார்.

இவ்வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றபோது அரவிந்த் கெஜ்ரிவாலும் அவருடன் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களும் நேரில் ஆஜராகினர். இதையடுத்து, இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds