[email protected]
feddral bank
BREAKING NEWS

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர சண்டை

பதிவு செய்த நாள்: 01 Nov 2016 10:57 am
By :

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வடபகுதியில் பன்டிப்போரா மாவட்டத்துக்குட்பட்ட அஜார் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்.

இதை அறிந்ததும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அங்கு பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் தப்பியோடாமல் தடுக்கவும், அவர்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும் அஜார் பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*