[email protected]
feddral bank
BREAKING NEWS

சிமி பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மத்தியபிரதேச ஐ.ஜி. விளக்கம்

பதிவு செய்த நாள்: 01 Nov 2016 10:45 am

8 ‘சிமி’ பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. போலீஸ் தரப்பில் கூறுவதை நம்ப முடியாது என்றும், இதுபற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் கமல் நாத் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிருந்தா கரத் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 ஆனால், எதிர்க்கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும், அது பாதுகாப்பு படையினரின் மனஉறுதியை சீர்குலைக்கும் என்றும் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் நரசிம்மராவ் தெரிவித்தார்.

அதுபோல், போலீஸ் தரப்பில் மத்தியபிரதேச ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘சிமி இயக்கத்தினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் 3 போலீசார் காயம் அடைந்தனர். போலீசார் பதிலுக்கு சுட்டனர். 46 ரவுண்டு சுட்டனர். கடுமையான துப்பாக்கி சண்டைக்கு பிறகு, 8 பேரும் வீழ்த்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 நாட்டு துப்பாக்கிகளும், சில கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. எனவே, இது போலி என்கவுன்ட்டர் என்று கூறுவது சரியல்ல. அவர்கள் தப்பியதில் இருந்து கொல்லப்பட்டது வரையிலான சம்பவங்கள் விசாரணையில் உள்ளன’ என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds