feddral bank
BREAKING NEWS

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 2 சதவீதம் அகவிலைப் படி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பதிவு செய்த நாள்: 27 Oct 2016 4:44 pm

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 2 சதவீதம் அகவிலைப் படி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்  படி கடந்த ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

இதன் மூலம்  50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக , மத்திய அரசு 7-வது சம்பள கமிஷன்படி 6 சதவீதம் அகவிலைப் படி உயர்வு செய்தது. அதாவது, அடிப்படை சம்பளத்தில் இருந்து 125 சதவீதம் உயர்த்தப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கள் மேலும் 3 சதவீதம் அகவிலைப் படி உயர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மேலும் 2 சதவீதம் அகவிலைப் படி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds