[email protected]
feddral bank
BREAKING NEWS

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் அறிகுறி தமிழகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

பதிவு செய்த நாள்: 27 Oct 2016 12:14 pm
By :

புதுடெல்லி உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், கடந்த சில நாட்களாக பூங்கா மூடப்பட்டு உள்ளது. இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர், கேரள மாநிலம் ஆலப்புழா பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாகவும், இதனை உறுதி செய்து உள்ள மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் பறவை காய்ச்சல் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தை பொறுத்த வரையில் இங்கு 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தினசரி 3 கோடி முட்டைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகளில் சுமார் 1 கோடி முட்டைகள் கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதால், கேரளாவில் முட்டை மற்றும் கோழி விற்பனை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, புதுடெல்லி, மத்திய பிரதேசம் மற்றும் கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த பாதிப்பு எங்கும் இல்லை. இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

கோழிப்பண்ணையாளர்களிடம் கேட்டபோது, கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் பாதிப்பு குறித்து பண்ணையாளர்களுக்கு எந்த தகவலும் இல்லை. தமிழகத்தில் இருந்து முட்டை மற்றும் கறிக்கோழி வழக்கம்போல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்றனர். இதற்கிடையே நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*