feddral bank
BREAKING NEWS

இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது

பதிவு செய்த நாள்: 27 Oct 2016 11:28 am

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் முகமது அக்தர் (வயது 35) இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்ப்பதாக ரகசிய தகவல் வெளியானது. இதையடுத்து அவரது செயல்பாடுகளை கடந்த ஒரு வார காலமாக உளவுத்துறை கண்காணித்து வந்தது. இதில் அவர் மீதான சந்தேகம் ஊர்ஜிதமாகியுள்ளது.

இதையடுத்து அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இந்திய ராணுவ தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை அனுப்பியுள்ளனர். உள்துறை மந்திரி மற்றும் கவர்னர் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை, பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து எல்லையோர ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds