feddral bank
BREAKING NEWS

ஆர்.ஸ்.புரா பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

பதிவு செய்த நாள்: 27 Oct 2016 11:11 am
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது கடந்த மாதம் இந்திய ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 40–க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் எல்லையோர பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், கிராமங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டு உள்ளது.
இந்த நிலையில்  மீண்டும் பாகிஸ்தான் இன்று அதிகாலை ஆர்.ஸ்.புரா பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் படைகள் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள்  6 பேர் படுகாயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை எதிர்த்து இந்திய பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds