[email protected]
feddral bank
BREAKING NEWS

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை

பதிவு செய்த நாள்: 27 Oct 2016 10:47 am

சென்னையை சேர்ந்தவர் வக்கீல் பேட்ரிக். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மகத்தான ஒரு சேவையாகும். இந்த சேவையினால், விபத்தில் ஏற்படும் உயிர்பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் போனஸ் தொகையை அதிகரிக்க கோரி தீபாவளி பண்டிகை நாளில் வேலை நிறுத்த போராட்டத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவிக்கின்றனர். கடந்த ஆண்டு அறிவித்தது போல, இந்த ஆண்டும் போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால், தீபாவளி நாளில், பட்டாசு விபத்துகளில் பாதிக் கப்படுவோருக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

எனவே, ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவேண்டும். தீபாவளியன்று ஆம்புலன்ஸ் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்தவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளடர் ஆஜராகி, ‘ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது. அதை அனுமதிக்க முடியாது’ என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டத்துக்கு கடந்த ஆண்டு தடைவிதித்து இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, இந்த ஆண்டுக்கும் பொருந்தும். மேலும், தீபாவளி அன்று ஆம்புலன்ஸ் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*