[email protected]
feddral bank
BREAKING NEWS

வைகோ- திருமாவளவன் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை-ஜி.ராமகிருஷ்ணன்

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 5:47 pm
By :

புதுவை பிரதேச மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநில உரிமை மற்றும் மக்கள் நலனுக்கான அரசியல் மாநாடு புதுவை ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் வர வேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தொடக்கவுரை ஆற்றினார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மாநாட்டின் முடிவில் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி செய்து வருகிறது. ஆனால் உரிய அதிகாரம் இல்லாமல் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் மீறி புதுவையில் கவர்னர் செயல்பட்டு வருகிறார். அனைத்து துறைகளிலும் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு வருகிறார்.

காவிரி பிரச்சினையில் மக்கள் நலக்கூட்டணி ஏற்கெனவே தீவிர போராட்டங்களை நடத்தியது. மேலும் ஜனாதிபதியை சந்தித்து மனுவும் அளித்தோம். இப் பிரச்சினையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தீபாவளிக்குப்பின் அறிவிப்போம்.

தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பாக வைகோ, திருமாவளவன் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் அனைத்து முடிவுகளையும் கலந்தே எடுத்து வருகிறோம். காவிரி பிரச்சினையில் எங்கள் கூட்டணி முழுமையாக செயல்பட்டு வருகிறது.

புதுவையில் மொத்தம் உள்ள 12.5 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 26 சதவீதம் அதாவது 3.28 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். 181 சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் புதுவையை விட்டு சென்று விட்டன. இதனால் வேலையில்லாத்திண்டாட்டம் அளவுக்கு மீறி உள்ளது. மாநில அரசு உரிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

புதுவையின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாநில அந்தஸ்து கோரிக்கையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுதியாக உள்ளது. அதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்.

புதுவை மாநிலத்தில் சுமார் 12000 ஏக்கர் விவசாய நிலம்,விவசாயத்தைதவிர வேறு வகைகளில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் விவசாயமே நசிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே புதுவை அரசு விரைவில் நிலப்பயன்பாட்டுக் கொள்கையை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுவை மாநில கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து பேசி உரிய முடிவை அறிவிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds