feddral bank
BREAKING NEWS

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு டிசம்பர் மாதம் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 12:07 pm
By :

விழுப்புரத்தில் கடந்த 30.8.2012 அன்று தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சியில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தே.மு.தி.க. மாநாடு நடந்தது.

இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அப்போதைய எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக அரசு மற்றும் காவல்துறையினரை அவதூறாக விமர்சனம் செய்து பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அரசு வக்கீல் பொன்.சிவா, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளின் விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின்போது ஏற்கனவே வெங்கடேசன், பார்த்தசாரதி ஆகியோர் ஆஜராகி புகார் மனு நகலை பெற்றுக்கொண்டனர்.

விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரும் இந்த 2 வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 2 வழக்குகளும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் – பிரேமலதா ஆஜராகவில்லை.

அவர்கள் சார்பில் தே.மு.தி.க. வக்கீல் முத்துலிங்கம் ஆஜராகி இருவருக்கும் இந்த வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நகலை சமர்ப்பித்து மனுதாக்கல் செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சரோஜினிதேவி வழக்கின் விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds