[email protected]
feddral bank
BREAKING NEWS

பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைக்குள் மீண்டும் அத்துமீறல்

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 5:36 pm

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்கி அழித்ததை தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தினமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள். இந்தியா தரப்பில் யாருக்கும் காயம் இல்லை. இதே போல் ஜம்மு பிராந்தியத்தில் ஆர்.எஸ். புரா பகுதியிலும் நேற்று பாகிஸ்தான் அத்து மீறலில் ஈடுபட்டது.

இன்று காலை ஆர்.எஸ். புரா பகுதியில் பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தார்கள். இந்த சண்டையில் எல்லை பாதுகாப்பு படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்தார். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நீடிக்கிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds