[email protected]
feddral bank
BREAKING NEWS

செம்மர கடத்தல் விவகாரம்:கரகாட்டக்காரி மோகனாம்பாள் அக்காள் மகன் கடத்தி கொலை

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 3:24 pm
By :

வேலூர் ஒல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் கரகாட்டக்காரி மோகனாம்பாள். இவர் செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ரூ. 4½ கோடி பணம் சிக்கியது.

இந்த செம்மர கடத்தல் விவகாரத்தில் மோகனாம்பாளுடன் அவரது அக்காள் மகன் சரவணனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரவணனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். வசந்தபுரத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு சரவணனின் மனைவி வந்தார். அவர் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் தனது கணவரை நேற்று இரவு ஒரு கும்பல் கடத்தி சென்றுவிட்டது. அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சரவணனை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கினர். இது தொடர்பாக ஓல்டு டவுன் பகுதியில் விசாரணை நடத்தினர்.

அப்போது சரவணனை அந்த கும்பல் ஓல்டு டவுன் மலையை நோக்கி கடத்தி சென்றதாக தகவல் கிடைத் தது. மேலும் சரவணனை அந்த கும்பல் கடத்தி கொலை செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து மலைப்பகுதிக்கு போலீஸ் படை விரைந்தது. இன்று காலை 6 மணி முதல் மலை பகுதியில் சரவணனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் மலையில் சரவணனின் பிணம் மீட்கப்பட்டது. அவரை கடத்தி சென்ற கும்பல் மலைப்பகுதியில் படுகொலை செய்து வீசிச்சென்று உள்ளது.

செம்மர கடத்தலில் தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*