[email protected]
feddral bank
BREAKING NEWS

கோவையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் 3 கண்டெய்னர் லாரிகளில் கோடிக்கணக்கான வங்கி பணம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 12:14 pm
By :

சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற ரெயிலில் மேற்கூரையில் துளை போட்டு ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வங்கிகளுக்கு எடுத்து செல்லும் பணம் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

அந்த வகையில் கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 4 வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் 3 கண்டெய்னர் லாரிகளில் சென்னை ரிசர்வ் வங்கிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு கோவையில் இருந்து இந்த லாரிகள் புறப்பட்டன. கோவை உதவி கமி‌ஷனர் முருகசாமி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்காக லாரிகளுடன் வந்தனர். 6 கார்களில் கண்டெய்னர் லாரிக்கு முன்னும் பின்னும் போலீசார் பின் தொடர்ந்து வந்தனர்.

இந்த லாரிகள் மதியம் 1.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு வந்தது. லாரி டிரைவர்கள் மற்றும் போலீசார் அங்கு சாப்பிடுவதற்கு முடிவு செய்தனர்.

உளுந்தூர்பேட்டையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் ஓட்டல் முன்பு 3 கண்டெய்னர் லாரிகளையும் நிறுத்தினர்.

உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையில் 50 போலீசார் பாதுகாப்புக்காக கண்டெய்னர் லாரிகளை சுற்றிலும் நின்றனர்.

லாரிகளில் வந்தவர்கள் மற்றும் போலீசார் சாப்பிட்டு முடித்த பின்னர் மதியம் 2.30 மணிக்கு கண்டெய்னர் லாரிகள் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றன.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*