[email protected]
feddral bank
BREAKING NEWS

கருணாநிதி விரைவில் உடல் நலம்பெற தமிழிசை வாழ்த்து

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 12:46 pm

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் சென்னை கோபாலபுர இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

அவரது உடலில் சில இடங்களில் சிவப்பு நிறத்தில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது.

வலியால் அவதிப்பட்ட அவருக்கு டாக்டர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை அளித்தனர்.

தற்போது உடலில் கொப்பளங்கள் குறைந்துள்ள நிலையில் டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். எனவே அவரை பார்வையாளர்கள் சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில் கருணாநிதி விரைவில் உடல் நலமடைய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மூத்த தலைவர் மரியாதைக்குரிய கலைஞர் ஒவ்வாமை பிரச்சனையால் உடல் நலம் பாதிப்படைந்தார் என்று கேள்விப்பட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவர் பூரண குணமடைந்து இயக்க பணியையும், அரசியல் பணியையும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds