[email protected]
feddral bank
BREAKING NEWS

ஐந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 5:51 pm

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகன் மாவட்டத்தில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மாவட்ட பாதுகாப்பு படையினர் அருகிலிருந்த காடுகளில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

தேடுதல் வேட்டையின்போது காடுகளுக்குள் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகளைத் தாக்கினர்.

இந்த துப்பாக்கி சண்டைக்குப்பின் தப்பியோட முயன்ற ஐந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், நக்சல் சீருடை, மின்சார வயர்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds