[email protected]
feddral bank
BREAKING NEWS

இந்திய எல்லைப்பகுதியில் உள்ள சில குக்கிராமங்களில் பாகிஸ்தான் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி ஆவேச தாக்குதல்

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 9:53 am
By :

உரி தாக்குதலுக்கு பிறகு சர்வதேச எல்லக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையோரத்தில் அமைந்துள்ள இந்திய கிராமங்களில் வாழும் மக்கள், எந்த நேரம் பாகிஸ்தான் எப்படி தாக்குதல் நடத்துமோ? என்பது தெரியாமல்  நிம்மதியும், உறக்கமும் இன்றி பதற்றத்தில் தவித்து வருகின்றனர்.

இதனால், எல்லைப்பகுதியில் உள்ள சில குக்கிராமங்களில் அச்சத்தில் தவித்து வந்த மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு குண்டு துளைக்க முடியாத வாகனங்கள் மூலம் பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா பகுதிக்கு அருகாமையில் இருக்கும் சில கிராமங்கள் மீது நேற்றும் பாகிஸ்தான் படைகள் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி ஆவேச தாக்குதல் நடத்தின.

இங்குள்ள சுச்சேத்கர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின்மீது அடுத்தடுத்து மோர்ட்டார் குண்டுகள் விழுந்ததால் அங்கு வசித்துவந்த ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.புரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் மேல்சிகிச்சைக்காக ஜம்மு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 ஒரு திருமண விழாவுக்கு செல்வதற்காக புறப்பட்டு வீட்டின் முற்றத்தில் காத்திருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாகவும், இதில் சிக்கிய 6 பெண்களுக்கும் முகம், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேபோல், பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலில் நேற்று சன்டுச்சக் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் படுகாயம் அடைந்தார்.

புலூரா கிராமத்தை சேர்ந்த ராம்லால் என்பவரின் வீடு மற்றும் பிடிப்பூர் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணை மீதும் மோர்ட்டார் குண்டுகள் விழுந்ததால் அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ள கால்நடைகள் பலியானதுடன் ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*