feddral bank
BREAKING NEWS

இந்தியா வந்த நியூசிலாந்து பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 12:43 pm

இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்தும் வகையில் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ இந்தியாவுக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மும்பை நகரில் நடைபெறும் இந்திய தொழிலதிபர்கள் கருத்தரங்கில் அவர் பங்கேற்கவும், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியா – நியூசிலாந்து இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் முன்னர்திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நியூசிலாந்து பிரதமரின் சிறப்பு விமானம் ஆக்லாந்து நகரில் உள்ள வெனுவப்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. வழியில் ஆஸ்திரேலியா நாட்டின் வடகிழக்கு பகுதியிலுள்ள டவுன்ஸ்வில்லி பகுதியில் பெட்ரோல் நிரப்புவதற்காக விமானம் தரையிறங்கியது.

பெட்ரோல் நிரப்பியபிறகு திடீரென்று ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பிரதமரின் விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தபடி பிரதமரின் விமானம் மும்பைக்கு செல்லாமல் நேராக டெல்லி வந்து சேரும். மும்பை நகரில் நடைபெறும் இந்திய தொழிலதிபர்கள் கருத்தரங்கில் ஜான் கீ அவர் பங்கேற்க மாட்டார். நாளை பிரதமர் மோடியுடனான சந்திப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என நியூசிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இன்று இந்தியா வந்த நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ-க்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முப்படை அணிவகுப்புடன் சிகப்புக் கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் ஜான் கீயை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய முப்படைகளின் தளபதிகளை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்ற ஜான் கீ, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஜான் கீயுடன் பிரதமர் மோடி இன்று நடத்தும் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds