feddral bank
BREAKING NEWS

கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்

பதிவு செய்த நாள்: 25 Oct 2016 10:48 am
By :

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல பீடி தொழிலதிபர் முகமது நிஷாம், கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டின் காவலாளியை காரை ஏற்றி கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு ஒரு ஆயுள் தண்டனையோடு கூடுதலாக 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

முகமது நிஷாமுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது எனவும், அவருக்கு இதைவிட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலாவும் முகமது நிஷாமுக்கு எதிரான கருத்துகளை கூறிவருகிறார்.

இந்த நிலையில், முகமது நிஷாமின் ஆதரவாளர்களிடம் இருந்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாக ரமேஷ் சென்னிதலா நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.

 கொலை மிரட்டல் விடுத்தவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என கூறிய ரமேஷ் சென்னிதலா அவர்கள் தான் முகமது நிஷாமுக்கு எதிராக கருத்துகள் கூறுவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் தனித்தனியாக புகார் அளித்தார்.

இந்த விவகாரத்தில் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்படும் என பினராயி விஜயன் உறுதி அளித்து உள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds