[email protected]
feddral bank
BREAKING NEWS

மக்கள் நலக் கூட்டணி சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மீளாய்வு-திருமா

பதிவு செய்த நாள்: 24 Oct 2016 4:43 pm

காவிரி பிரச்சனை குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (25-ந்தேதி) அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். இதில் பா.ஜனதா, தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து விட்டன.

இருப்பினும், மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவினை தெரிவிக்காமல் இருந்து வந்தது. இன்று ஆலோசனை கூட்டத்தை கூட்டி முடிவு தெரிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று கூறி இருந்தார்.

அதன்படி திமுக சார்பில் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தோழமை கட்சிகளுடன் மீண்டும் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுடன் நேரில் சந்தித்து பேசப்படும். சிவகங்கையில் உள்ள மதிமுக தலைவர் வைகோவுடன் தொலைபேசியில் பேசப்படும். ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணி சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மீளாய்வு செய்வது தவறில்லை.

காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த திமுகவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அக்டோபர் 6-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 10 லட்சம் பேரை கூட்டி தலைநகர் சென்னையில் பேரணி நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds