[email protected]
feddral bank
BREAKING NEWS

பணம் பட்டுவாடாவை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-பொன். ராதாகிருஷ்ணன்

பதிவு செய்த நாள்: 24 Oct 2016 11:37 am

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட உள்ளனர்.

பணம் பட்டுவாடா புகாரை தொடர்ந்து தஞ்சை, அரவக்குறிச்சியில் ஏற்கனவே தேர்தல் நிறுத்தப்பட்டது. மீண்டும் பணம் பட்டுவாடா விதி மீறல்கள் நடைபெற்றால் தமிழ்நாட்டுக்கு இதை விட வேறு அவமானம் இருக்க முடியாது.

விதி மீறல்கள் நடைபெற்றால் உடனே தேர்தலை ரத்து செய்ய வேண்டும். பணம் பட்டுவாடாவை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பிரச்சனை இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை அல்ல. பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது காவிரி பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் தற்போது மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசை குறை கூறி வருகிறார்கள். பெற்ற குழந்தை இறந்தால் என்ன துக்கம் இருக்குமோ அதே போல் தான் விவசாயியின் பயிர் கருகினால் ஏற்படும்.

ஏனென்றால் நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். விவசாயிகளின் கஷ்டம் எனக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*