feddral bank
BREAKING NEWS

அனைத்து கட்சி கூட்ட விவகாரம்: வைகோவிற்கு திருநாவுக்கரசர் கண்டனம்

பதிவு செய்த நாள்: 24 Oct 2016 2:58 pm

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (25-ந்தேதி) கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நானும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் விவசாய அணி தலைவர் பவன்குமார் ஆகியோரும் பங்கேற்கிறோம்.

காவிரி பிரச்சினை தமிழக நலன் சார்ந்த பிரச்சினை. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினை. இது தேர்தலுக்காகவோ, கூட்டணிக்காகவோ கூட்டப்படும் கூட்டம் அல்ல. ஆளும் கட்சி செய்திருக்க வேண்டியுள்ளதை எதிர்கட்சி செய்துள்ளது.

எல்லோரும் இதில் கலந்து கொள்வது நல்லது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையை அரசியல் கட்சிகள் அரசியல் வாழ்க்கைக்கான பிரச்சினையாக எடுக்கிறதா? என்று கேட்கிறீர்கள். இந்த பிரச்சினை இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. இதை சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பார்க்க வேண்டும்.

நிர்வாக ரீதியான பிரச்சினையை மத்திய அரசு தீர்க்க வேண்டும். சட்ட ரீதியான பிரச்சினையை கோர்ட்டு தீர்த்து வைக்க வேண்டும். கட்சி-மாநிலம் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து அனைவரும் செயல்பட வேண்டும்.

தமிழர்களின் உரிமையை காக்க மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ள கூட்டத்தை வைகோ விமர்சித்துள்ளார்.ஆனால் விமர்சனம் செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு. கூட்டத்தில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரவர் உரிமை. அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிப்பது ஏன்?

அனைத்து கட்சி கூட்டத்துக்கும் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களை தி.மு.க.வில் இணைத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒவ்வொரு கட்சிகளுக்கும் போகிறவர்கள் போவார்கள் வருபவர்கள் வருவார்கள். இது அவரவர் விருப்பம்.

நாளை நடைபெறும் கூட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொள்வது மகிழ்ச்சி. காவிரி வி‌ஷயத்தில் மத்திய பா.ஜனதா அரசு கடமை தவறி விட்டது. தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. மலிவான அரசியல் நடத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வசந்த குமார் எம்.எல்.ஏ., செல்வ பெருந்தகை, கோபண்ணா, சிரஞ்சீவி, ஹசீனா சையத் ஆகியோர் உடன் இருந்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*