feddral bank
BREAKING NEWS

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்கும்-ஜி.கே.வாசன் அறிவிப்பு

பதிவு செய்த நாள்: 24 Oct 2016 2:29 pm
By :

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி நதிநீர் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) கூட்டியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசுதான் இந்த கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டும்.

அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்கவில்லை. அது வருத்தம் அளிக்கிறது. எனவே எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்கும். த.மா.கா. சார்பில் நானும் (வாசன்) விவசாய அணித் தலைவரும் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொள்வோம்.

3 தொகுதி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் த.மா.கா. கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விவாதித்து எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்.

நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் பொதுபிரச்சனை என்ற அடிப்படையிலும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி நடத்தப்படுகிறது. எனவே இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

பேட்டியின் போது கோவை தங்கம், விடியல் சேகர், கொட்டிவாக்கம் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds