feddral bank
BREAKING NEWS

வருகிற 17-ந்தேதி அ.தி.மு.க.வின் 45-வது ஆண்டு தொடக்க விழா

பதிவு செய்த நாள்: 14 Oct 2016 12:04 pm
By :

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 17-ந்தேதி 45-வது ஆண்டு தொடங்குகிறது.

இதை முன்னிட்டு அன்று காலை 10 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை, தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆருடைய சிலைக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து ‘தொடக்க நாள் மலரை’ வெளியிட உள்ளார்.

நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds