[email protected]
feddral bank
BREAKING NEWS

பிரதமர் மோடியை குறித்து முகநூலில் விமர்சித்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது

பதிவு செய்த நாள்: 14 Oct 2016 11:56 am

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் அருகேயுள்ள சாரத்னா பகுதியை சேர்ந்தவர் முடாசிர் ரானா. இங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கும் இவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், யோகாசன குரு பாபா ராம்தேவ் ஆகியோரைப் பற்றி, அவதூறாகவும், தரக்குறைவாகவும், தவறான முறையிலும் விமர்சித்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, முடாசிர் ரானாவை நேற்று கைதுசெய்த போலீசார், ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds