[email protected]
feddral bank
BREAKING NEWS

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைப்பதற்கான பொது அடிப்படை திட்ட இறுதி ஒப்பந்தம் தயார்

பதிவு செய்த நாள்: 14 Oct 2016 5:12 pm

கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன் அணுமின் நிலையம் செயல்படுகிறது. அங்கு 1-வது மற்றும் 2-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தற்போது, 3 மற்றும் 4-வது அணுஉலைகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அந்த 2 அணு உலைகள் அமைப்பதற்கான பொது அடிப்படை திட்ட இறுதி ஒப்பந்தம் தயாராகியுள்ளது.

பிரேசில், ரஷியா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா நாடுகள் இணைந்த பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கோவாவில் இந்த வார இறுதியில் நடைபெறுகிறது. அதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொள்கிறார்.

அப்போது மேலும் அமைக்கப்பட உள்ள 5-வது மற்றும் 6-வது அணு உலைகளுக்கான பொது அடிப்படை திட்ட ஒப்பந்தம் இறுதி முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*