feddral bank
BREAKING NEWS

2018-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தனது மகனை களமிறக்க சித்தராமைய்யா தீவிரம்

பதிவு செய்த நாள்: 13 Oct 2016 2:28 pm

கர்நாடகா மாநிலத்தில் தற்போது சித்தராமைய்யா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. அது 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகா அரசியலில் சுமார் 30 ஆண்டுகள் பல்வேறு பதவிகளை வகித்து விட்ட சித்தராமைய்யாவுக்கு டெல்லி அரசியல் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக அவர் முடிவு செய்துள்ளார்.

மைசூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் டெல்லி அரசியலில் செல்வாக்கு பெற அவர் விரும்புகிறார்.

இதற்கிடையே சித்தராமைய்யா 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தன் இரண்டாவது மகன் யதிந்திராவை தயார்படுத்தி வருகிறார். டாக்டருக்கு படித்துள்ள யதிந்திராவை முதல்வராக்கி விட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

வருனா தொகுதியில் போட்டியிட உள்ள யதிந்திராவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ய சித்தராமைய்யா இப்போதே ஏற்பாடுகள் செய்து வருகிறார். சித்தராமைய்யாவின் இந்த நடவடிக்கைகளால் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*