[email protected]
feddral bank
BREAKING NEWS

டொனால்டு டிரம்ப் மீது 2 பெண்கள் கொடுத்த பாலியல் புகாரால் பரபரப்பு

பதிவு செய்த நாள்: 13 Oct 2016 2:11 pm
By :

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகிறார்கள். ஓட்டு பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு பெண்கள் தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்து வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரது கட்சிக்குள்ளும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.

இந்த நிலையில் டிரம்ப் மீது ஜெசிக்கா லீட்ஸ், ரசேல் குரூக்ஸ் ஆகிய 2 பெண்கள் செக்ஸ் புகார் கூறியுள்ளனர். இந்த 2 பெண்கள் பேட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

ஜெசிக்கா லீட்ஸ்க்கு தற்போது 74 வயதாகிறது. இவர் 30 வருடங்களுக்கு முன்பு விமானத்தில் நியூயார்க் நகருக்கு பயணம் செய்த டிரம்ப் தன்னை நோக்கி வந்து திடீர் என்று செக்ஸ் குறும்பில் ஈடுபட்டார். டிரம்பை அதன் பின்பு நான் சந்தித்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பெண்ணான ரச்செல் குரோக்ஸ் கூறியதாவது:-

எனக்கு இப்போது 32 வயதாகிறது. 10 வருடத்துக்கு முன்பு நான் மான்ஹைட்டன் நகரில் டிரம்ப் டவர் கட்டிடத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தேன். அது டிரம்புக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் என்று எனக்கு தெரியாது. ஒரு நாள் அவர் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த போது டிரம்ப் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

2 பெண்களின் புகாரால் டிரம்பில் செல்வாக்கு மேலும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds