[email protected]
feddral bank
BREAKING NEWS

கர்நாடகா அணைகளில் தண்ணீர் மிகவும் குறைவாகவே உள்ளது-மத்திய நிபுணர் குழு தகவல்

பதிவு செய்த நாள்: 13 Oct 2016 3:00 pm
By :

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணை நடந்த போது தமிழ்நாடு, கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தருமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் ஜா தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

சமீபத்தில் அந்த ஆய்வுக்குழு தமிழக, கர்நாடகா அணைகளில் நேரில் சென்று பார்த்து எவ்வளவு தண்ணீர் உள்ளது என்று தகவல்கள் சேகரித்தனர். நேற்று முன்தினம் அவர்களது ஆய்வுப் பணி முடிந்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் மத்திய நிபுணர் குழு அறிக்கையை தயார் செய்து வருகிறது. அந்த அறிக்கை வரும் திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் மத்திய நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு சம்பா சாகுபடியை காப்பாற்ற தற்போது தண்ணீர் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. என்றாலும் அமராவதி, பவானி, மேட்டூர் அணைகளில் தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

மேலும் வடகிழக்கு பருவ மழையின் போது ஓரளவு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும். அப்போது கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து இயற்கையாகவே தண்ணீர் வந்து விடும்.

கர்நாடகாவை பொருத்தவரை அங்குள்ள 4 அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் கர்நாடகா அணைகளில் தண்ணீர் மிகவும் குறைவாகவே உள்ளது. அந்த நிலை மாறுமா? என்று தெரியவில்லை.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் தண்ணீர் நிலவரம் மோசமாக உள்ளது. ஆனால் கர்நாடகாவில் தண்ணீர் நிலவரம் இன்னும் மோசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds