[email protected]
feddral bank
BREAKING NEWS

விவசாயக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் உ.பி.யில் ராகுல் தேர்தல் வாக்குறுதி

பதிவு செய்த நாள்: 05 Oct 2016 10:54 am

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் சமாஜ்வாதி கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதற்கிடையில், அங்கு பழைய கணக்கை புதுப்பித்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியும், புதுக்கணக்கு துவங்க பா.ஜ.க.வும் மும்முரமாக களமிறங்கி உள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல் மந்திரி பதவிக்கான வேட்பாளராக டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தின் பெயரை அறிவித்துள்ள அக்கட்சியின் தலைமை எப்படியும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து, ’விவசாயிகள் யாத்திரை’ என்ற பெயரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முகாமிட்டு பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பிரசாரப் பயணத்தின் ஒருகட்டமாக இங்குள்ள ராம்பூர் மாவட்டம், மனிஹரன் கிராமத்தில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறிவிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

விவசாயிகளுக்கு தருவதாக அறிவித்த 1.10 லட்சம் கோடி ரூபாயை பெரும் தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு கடனாக அளித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சி அமைத்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும், மின்கட்டணம் பாதியாக குறைக்கப்படும் எனவும் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds